சத்யமங்கலம் தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை எண் 209 ல் பயணம் போயிருக்கீங்களா? காட்டு வழி பயணம் மனசுக்கு புத்துணர்ச்சியாகவும் ஒருவித சாகச உணர்வு மிக்கதாகவும் இருக்கும் என்று சொல்வார்கள்.


அது எந்த அளவுக்கு உண்மை என்பது பலருக்கும் தெரியாது. அந்த சாகச உணர்வு பயமாக மாறாத வரையில் அது நல்லதாகவே இருக்கும்.


ஆனால் இந்த சத்தியமங்கலம் காட்டுப் பாதை பற்றி கேட்கவே வேண்டாம். இங்கு சாகசத்துக்கு சாகசமும், பயத்துக்கு பயமும் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கும்.


திகைக்க வைக்கும் திக் திக் நிமிடங்களாக இருக்கும் இந்தக் காட்டுவழி நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறியப்படுகிறது இங்கு சென்றவர்கள் பல தடவை இது போன்ற அமானுஷ்ய சக்திகளை நேரில் கண்டதாக தெரிவிக்கின்றனர்