இந்த சாலைகள்லலாம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க... பேய் லிப்ட் கேக்குதாம்
பொது இடங்களுக்கு பயணிக்க நம்மை அழைத்துச் செல்வது சாலைகள் தான். அப்படிப்பட்ட சாலைகள் அமானுஷ்யத்தால் பாதிக்கப் பட்டிருந்தால் என்ன பண்றது.

 

இங்கே ஒரு சாலையில் வேகமாக காட்டு வழி சாலைகள் எல்லாம் பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கும் ஆனால் கூடவே பேயும் பேய் பயமும் இருக்கும்.

 

இப்படி இந்தியாவில் பேய் இருக்கும் இடங்களாக அறியப்படும் மிக பயங்கரமான சாலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 

பேயை நேரில் பார்க்காத வரைக்கும் இந்தியாவில் மற்ற அழகிய சாலைகளைப் போலவே, இந்த சாலைகளும் அழகானதாகவே தெரியும். ஒரு வேளை நீங்கள் சுற்றுலா செல்லும் வழியில் பேயைப் பார்த்தா ? வாங்க திக் திக் பயணத்துக்கு உங்களை அழைச்சிட்டு போறேன்


கிழக்கு கடற்கரை சாலை


சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் போது கிழக்கு கடற்கரை சாலையில் பேய்கள் இருப்பதாக பலர் கூறியுள்ளனர்.


அமானுஷ்யமான பல விபத்துகள் நடக்கும் பகுதிகளை எடுத்துக்கொண்டால் அதில் இந்த சாலையும் முதல் 10 இடங்களில் வந்துவிடுகிறது அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்த பகுதியில் அதிகரித்து வருவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர் ஒருவேளை இது விளையாட்டாக இருந்தாலும் கூட பேய் இருக்குமோ இல்லையோ நீங்கள் வாகனத்தில் செல்லும் போது அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது மிக அதிக கவனத்துடன் செல்வது உங்கள் வாழ்க்கைக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் மிகவும் நல்லதாக அமையும்